Wednesday, July 14, 2010

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (2:128)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" (2:250)

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامً

எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! 25:74

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286)

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! (3:8)

رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ

"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்". (3:9)

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!"(3:16)

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (3:53)

ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக". (3:147)

رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" . (3:191)

رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ

"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை!" . (3:192)

رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ

"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!". (3:193)

رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ

"எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. (3:194)

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" . (7:23)

رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே" . (7:47)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), மரணிக்கச் செய்வாயாக!. (7:126)

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ

எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" . (10:85)

رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء

"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் ! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை." (14:38)

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" . (14:41)

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

"எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" . (18:10)

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

"எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" . (23:109)

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ

"எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (40:7)

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ

"எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" . (59:10)

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது," (60:4)

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

"எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" . (66:8)

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ

எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன் 7:89

رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ

எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம் 44:12

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء

("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!" (14:40)

பரகத் பொருந்திய ரமலான் மாதத்தில் ஓத வேண்டிய தூஆக்கள்

1.இறைவா! எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக.

2.இறைவா! முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக.

3.இறைவா! ரமலான் உடைய அருட்கொடைகளையும் பரக்கத்துகளையும் எங்களுக்குநிறைவாக தந்தருள்வாயாக!

4.இறைவா எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக! மேலும் ஹலாலான ரிஸ்கை த்ந்தருள்வாயாக!

5.இறைவா! இஸ்லாமிய சட்டத்தின்படி முழ்மையான முறையில் செயல் படக் கூடியவர்கள் எங்களை ஆக்கியவைப்பாயாக!

6.இறைவா! நீயே எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக! மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிவைப்பாயாக! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

7.இறைவா! லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக!

8.இரைவ! ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாஆக!

9.இறைவா! பொய் புறம், கோபம்,பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை காப்பாயாக!

10.இறைவா!வறுமையின் பயம் மற்றும் கடன் சுமையை விட்டும் எங்கலை பாதுகாப்பாயாக!

11.இறைவா!எஙக்ளின் சிறிய பெரிய பாவங்களை மன்னிப்பாயாக!

12.இறைவா! தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை காப்பாயக!

13.இறைவா! முழுமையான பர்தா முறையில் பெண்களை வாழச்செய்வாயாக!

14.இறைவா! சிறிய பெரிய எல்லா நோய்களை விட்டு எங்களை வாழச்செய்வாயாக!

15.இறைவா! இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!

16.இறைவா! பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!

17.இறைவா பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழ வைப்பாயாக!

18.இறைவா! நாளை மறுமை நாலிபெருமனார் (ஸல்) அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுள் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக!

19.இறைவா! மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு அருள்வாயாக!

20.இறைவா! உன்னுடைய பிரியத்தையும் எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக!

21. இறைவா! மரண வேதன. மண்ணரை வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

22.இறைவா! இரைவா! முன்கர் நக்கீர் உடைய கேள்வி கனக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக!

23. இறைவா! நாலை கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு த்ந்தருள்வாயாக!

24.இறைவா! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாக!

25. இறைவா! கியாமத் நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

26.இறைவா! கியாமத் நாளில் இழிவுகலை விட்டும் எங்களை மூமீனான ஆண், பெண் அனைவரையும் காப்பாற்றுவாயாக!

27.இறைவா! எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுபாயாக!

28.இறைவா! கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயக!

29.இறைவா! ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக!

30.இறைவா! ஈருலகிலும் பெருமானார் (ஸல்) அவர்கலின் அடிமையாக எங்களை ஆக்கிவைப்பாயாக!

எந்த ஒரு தூஆவையும் ஓதுவதற்கு முன்பும், பின்பும் ஸலவாத் ஓதிக்கொள்ளுங்கள்.

ரமாலான் மாதம் ஓதும் முக்கிய தூஆக்கள்

1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் தூஆ
"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்".

அல்லாவே! கிருபையாளர் களுக்கெல்லாம் மாபொரும் கிருபையாளனே!உன்னுடைய கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக.


2. இரண்டாம் பத்தில் ஓதும் தூஆ
"அல்லாஹு ம் மக்பிர்லி துனூபனா வக‌ஹ்(த்)தாயானா குல்ல ஹா யாரப்பல் ஆலமீன்".

அல்லாவே!ஆலத்தார்களின் இரட்சகனே!எங்கலுடைய பாவங்களையும் எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக.

3. முன்றாம் பத்தில் ஓதும் தூஆ
அல்லாஹு ம்மாதிக்னி மினன்னாரி வ அத்கில்னில் ஜன்னத யாரப்பல் ஆலமீன்.

அல்லாவே!ஆலத்தார்க்ளின் இரடகனே! எங்களை நரத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!

குறிப்பு

மேற்கண்ட முன்று தூஆக்களையும் எவ்வளவு அதிகமாக ஓத முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதுவது சிறந்தது. மற்ற தூஆக்களுடனும் சேர்த்தும் ஓதலாம்.

ரம்லான் மாதத்தில் ஓத வேண்டிய முக்கியமான துஆக்கள்.


1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் துஆ
"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்".

அல்லாவே! கிருபையாளர்களுக்கெல்லாம் மாபொரும் கிருபையாளனே!உன்னுடைய கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக.

2. இரண்டாம் பத்தில் ஓதும் தூஆ
"அல்லாஹு ம் மக்பிர்லி துனூபனா வக‌ஹ்(த்)தாயானா குல்ல ஹா யாரப்பல் ஆலமீன்".

அல்லாவே!ஆலத்தார்களின் இரட்சகனே!எங்கலுடைய பாவங்களையும் எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக.

3. முன்றாம் பத்தில் ஓதும் தூஆ
"அல்லாஹு ம்மாதிக்னி மினன்னாரி வ அத்கில்னில் ஜன்னத யாரப்பல் ஆலமீன்".

அல்லாவே!ஆலத்தார்க்ளின் இரடகனே! எங்களை நரத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!

குறிப்பு

மேற்கண்ட முன்று தூஆக்களையும் எவ்வளவு அதிகமாக ஓத முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதுவது சிறந்தது. மற்ற தூஆக்களுடனும் சேர்த்தும் ஓதலாம்.

தீராத நோய்கள் தீர ஓதும் தூஆ

1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான்.
2. மனிதர்களே! உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபதேசமும், இதயங்களில் இருப்பவைகளுக்கு நோய் நிவாரணியும் வந்துவிட்டன.
3.குர் ஆனில் இருந்து விசுவாசிகளுக்கு எவை சௌக்கியமாகவும், அனுக்கிரமாகவும் உள்ளனவோ அவற்றினை நாம் இறக்கி வைப்போம்.
4.அதன் (தேனியின்) வயிறுகளிலிருந்து நிறங்கள் பலதரப்பட்ட பானம் அதில் மனிதர்களுக்கு ஆரோக்கியம் உள்ளது.
5. நான் நோய் வாய் படும் பொழுது என்னை அவன் சுகப்படுத்திவைப்பான்.
6. (நபியே) அது ( குர் ஆன்) விசுவாசம் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் சௌக்கியமாகவும் உள்ளது.


1. வயஷ்பி ஸூதூர கவ்மின் முஃமினீன்.
2. யா அய்யு ஹ்ன்னாஸு கத்ஜா அத்கும் மவ இளத்துன் மிர் றப்பிகும் வஷீபாஉ லிமா பிஸ்ஸுதூரி.
3. வனு நஜ்ஜிலு மினல் குர் ஆனி மாஹுவ ஷிபா உன் வ‌ரஹ்மத்துன் லில் முஃமினீன்.
4.எக்ருஜ்மின் புதூனிஹாஷராபுன் முக்தலிபுன் அல்வானுஹு பிஹி ஷிபா உன் லின்னாஸி.
5. வஇதா மரிள்து பஹுவ யஷ்பீனி
6. குல்ஹுவ லில்லதீன ஆமனூ ஹுதன் வஷிபாஉன்

இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்பதற்கு உகந்த தூஆ

//அல்லாஹும்ம அன் த ரப்பி லா இலாஹா இல்லா அன் த ஹலக்தனி வ அனா அலா அஹ்திக வ வாதிக மா அஸ்த‌தாத்து அவூது பிக மின் ஷர்ரி மா ஸனாது அயூவு லக பிநிய்மதிக அலய்ய வ அயூவு பிஜன்பி ஃபக்பிர்லி ஃப் இன்னஹூ லா யக்ஃபிரு ஜுனூப இல்ல அன் த‌//

//ஸய்யிதுல் இஸ்திஃபார்

இறையவனே! நீ என் இரட்சகன்.
உன்னைத்தவிர வேறு நாயன் இல்லை.
நீயே என்னைப் படைத்தாய்.
நான் உன் அடிமை.

இயன்ற அளவு உன் வாக்குப்படியும் உன்னிடம் செய்த ஒப்பந்தப்படியும் நடந்து வருகிறேன்.
நான் செய்தவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
எனக்கு நீ வழங்கிய உபகாரஙக்ளை மனமாரச் சொல்லிக் காட்டுகிறென்.
என் பாவஙக்ளை ஒப்புக்கொள்கிறேன்.

என்னை மன்னித்துவிடு! நிச்சயமாக உன்னைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாருமில்லை.//

//இது மன்னிப்பு தேடுவதற்குரிய மிகச்சிறந்த தூஆ. இது ஸய்யிதுல் இஸ்திஃபார் எனப்படுகிறது. அதை நம்பிக்கையுடன் பகலில் ஓதி மாலையில் இறந்துவிட்டவர், அவ்வாறே ஓதி காலையில் இறந்துவிட்டவர் சுவனம் செல்வார் என்று பெருமானார் (ஸல்) அவர்களருளியுள்ளார்கள்.//

ஸலவாத்தன் துனஜ்ஜின்னா

அல்லஹும்ம ஸல்லி அலா செய்யதினா வ மௌலானா முகம்மதின் வ அலா ஆலி செய்யதினா மௌலானா முகம்மதின் ஸலவாத்தன் துனஜ்ஜின்னா பிஹா மின் ஜமீஅல் அஹ்வாலி வலாஆஃபாதி வதக்லீலன பிஹா ஜமீஅல் ஹாஜாதி வதுதக்ஹிர்னா பிஹா மின் ஜமீஅல் ஸய்யிஆத்தி வதர்ஃபகுனா பிஹா இன் தக்க அலல் தர்ஜாதி வதுபல்லிகுனா பிஹா அக்ஸல் ஆயாதி மின் ஜமீஅல் ஹைராதி ஃபில் ஹயாதி வபஅதல் மமாதி இன்னக்க அலா குல்லி ஸையின் கதீர்.

யா அல்லாஹ்! எங்கள் தலைவர்,பொறுப்பாளர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், எங்கள் தலைவர், பொறுப்பாளர் முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் நீ ஸலவாத்து அருள் புரிவாயாக! அதன் காரணமாக எங்களை சகலவித ஆபத்துகள், இடுகண்களிலிருந்து காப்பாற்றுவாயாக! மேலும் எங்களது சல தேவைகளையும் நிறைவேற்றுவாயாக! மேலும் எங்களை உயர் பதிவிகளுக்கு உயர்த்துவாயாக! மேலும் வாழ்விலும், மரணத்திற்குப் பின்னும் உள்ள எல்லா நன்மைகளின் இறுதி எல்லைகளை அடையச் செய்வாயாக! நிச்சயமாக நீ எல்லாவற்றின் மீதும் ஆற்றல் படைத்தவன்!

துன் ஜீனா ஸலவாத்தை தனியாகவோ ,கூட்டாகவோ அதிகமாக ஓதுவதில் பலனாகவும் வீடுகளில் தகுந்த இடத்தில் எழுதி வைபப்தாலும், அல்லாஹு தஆலா பலவிதமான இன்னல்களிலிருந்தும் சோதனைக் காலங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறான்.